தம்புள்ளையில் பேருந்துடன் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தம்புள்ளை ஏ – 09 ஆம் இலக்க வீதியில் மிரிஸ்கோனியாவ பகுதியில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர்
37 வயதுடைய மிரிஸ்கோனியாவ பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



















