கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு கல்வித் தகுதியில்லாத பொருத்தமற்ற நபரை ராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனும் சந்திரகாந்தன் நியமிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இது குறித்து சமூக வலைத்தளத்தில் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகன் கருத்து வெளிப்படுத்தியுள்ளார்.
“கிழக்கு பல்கலை கழகத்திற்கு கற்பித்தல் துறைக்கு அல்லது கல்வி நிர்வாக துறைக்கு பொருத்தமில்லாத அதாவது தகுதி இல்லாத ஒருவரையோ அல்லது ஒரு குடும்பத்தையோ தங்களது அரசியல், அதிகார செல்வாக்கின் நிமிர்த்தம் திணிக்க முற்படுவதாக கற்ற சமூகத்தின் சார்பாக அறிய முடிகிறது.
அவ்வாறு இருப்பின் அது தடுக்கப்பட வேண்டியது. கல்லாதவர்கள் கற்றவர்களுக்கு கற்பிப்பது தான் கல்வி என்றால் கற்றவர்கள் என்னாவது கல்விதான் என்னாவது. கல்வியா? செல்வமா? அரசியலா? என்றால், அரசியல் தான் அரியாசனம் ஏறும் என்றால் எதிர்காலத்தில் உங்களது ஒரு தனி ஆசனம் இல்லாமல் போகும்.
எனவே எம்மால் குறிப்பிட்ட செய்தியை கருத்தில் கொண்டு எமது எதிர்கால கல்வி சமூகம் வளர ஆவனை செய்யுமாறு தயவுடன் கேட்கின்றேன் ” என சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.