கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 50 வயதுடைய நபரொருவர் நோய் எதிர்ப்பு மருந்து வழங்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதேவேளை குறித்த நபர் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்தாரா? என்பது தொடர்பில் நாளைய தினம் (27-08-2023) பரிசீலனை நடத்தப்படும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்தார்.
அதுவரையில் நோயாளர்களுக்கு குறித்த மருந்து வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதி பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.