பொதுவாக வெள்ளிக் கிழமை என்பது தெய்வத்திற்குரிய கிழமையாக இருக்கிறது.
வாரத்தில் எந்த நாளில் சாமி கும்பிடவில்லை என்றாலும் வெள்ளிக் கிழமைகளில் சாமி கும்பிடுவது வழக்கம்.
குபேர விளக்கு
நம் வீட்டு மகாலட்சுமி நம் நில வாசப்படியில் தான் வசிக்கிறாள். எனவே நில வாசற்படிக்கு வைக்கும் மஞ்சள்தூளில் சிறிதளவு பச்சைக் கற்பூரத்தை கலந்து, குழைத்து நில வாசப்படியில் பூசுங்கள்.
அதன்பின்பு குங்குமம் வையுங்கள். இந்த முறை மிகவும் சிறப்பான முறையாக சொல்லப்பட்டுள்ளது.
கடைகளில் பெரும்பாலும் குபேர விளக்கு கிடைக்கிறது. வெள்ளிக் கிழமைகளில் தாமரை திரி வைத்து அதில் விளக்கேற்றி வந்தால் குபேர அருள் கிடைக்கும்.
வீட்டு பூஜை அறையில் வைத்திருக்கும் கண்ணாடியானது கிழக்கு திசை நோக்கியோ அல்லது வடக்கு திசை நோக்கியோத் தான் இருக்க வேண்டும். சுவாமி படம் எந்த திசையில் வைத்துள்ளீர்களோ அதே திசையில் தான் முகம் பார்க்கும் கண்ணாடியும் வைக்க வேண்டும்.
பச்சைக் கற்பூரத்தின் மகிமை
வெள்ளிக் கிழமை சுக்கிர ஓலையில் தாமரை இதழ் கொண்டு மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்து மந்திரம் கூறினால் செல்வம் பெருகும்.
வெள்ளிக் கிழமை மாலை வேளையில் வீட்டை சுத்தம் செய்து சாம்பிராணி புகையை வீடு முழுக்க புடிப்பதால் வீட்டில் கெட்ட சக்திகள் இருந்தால் விலகி நேர்மறை ஆற்றலை அதிகரிக்க முடியும்.
பச்சைக் கற்பூரத்தின் மனமானது தேவதைகளின் மனதை மகிழ்விக்கும். நம் வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். கடன் சுமை குறையும். வீடு சுபிட்சமாக இருக்கும்.
அதுமட்டுமல்லாது வெள்ளிக் கிழமைகளில் அரச மரத்தை 11 முறை சுற்றி வந்து அந்த மரத்தடியில் அமர்ந்து இருக்கும் விநாயகருக்கு 11 விளக்கு ஏற்றி வந்தால் பண வரவு அதிகரிக்கும்.