மதுபான போத்தல்களில் போலி முத்திரைகளை பயன்படுத்தி விற்பனை செய்யப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த நிறுவனத்தின் உரிமம் உடனடியாக இரத்து செய்யப்படும் என மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ் விடயம் தொடர்பாக ஜனாதிபதி தங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் நாட்டில் தொடர்ந்தும் பதிவாகி வருவதாக மதுவரித்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.