யாழில் தற்போது கணிதப் பிரிவில் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சமூக வலைத்தளத்தில் நபர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
” வழக்கமாக கணிதப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதல் 100 இடங்களுக்குள் குறைந்தது 10 யாழ் மாவட்ட மாணவர்கள் இருப்பார்கள்.
இந்த வருட A/L பெறுபேற்றில் யாழில் இருந்து வெறும் ஒரேயொரு மாணவரே முதல் 100 இடங்களுக்குள் வந்திருக்கிறார்.
இப்போதைய நிலை தொடர்ந்தால் இன்னும் சிறிது காலத்தில் மாவட்ட அடிப்படையிலான கோட்டா முறையில் மாத்திரமே யாழ் மாவட்டத்திலிருந்து மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல முடியும்.
யாழ் மாவட்டத்திலிருந்து மெரிட்டில் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் எண்ணிக்கை வெகுவாக குறைந்துகொண்டு செல்கிறது.
யாழ் மாவட்டத்திலிருந்து மெரிட்டில் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் எண்ணிக்கை குறைந்தால் மொத்தமாக யாழ் மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை கணிசமாக குறையும்”.