காலியில் உள்ள பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் 12 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் தனது வீட்டில் நடத்தும் மேலதிக பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்ட மாணவர்களில் ஒருவரையே இவ்வாறு பாலியில் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.