மாத்தறை மஹிந்த ராஜபக்க்ஷ கல்லூரியின் பழைய அறை ஒன்றின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆபத்தான ஆயுதங்கள் துப்புரவு பணிகளின்போது நேற்று திங்கட்கிழமை (18) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாத்தறை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள்
மஹிந்த ராஜபக்க் கல்லூரியும் அதனைச் சுற்றியுள்ள பகுதியும் 2015 ஆம் ஆண்டு தேசத்திற்கு மகுடம் (தயட்ட கிருல) கண்காட்சிக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கண்காட்சிக்கு வருகை தந்த பிரமுகர் ஒருவரை இலக்காகக் கொண்டு இந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கொண்டுவரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டதா அல்லது வேறு ஒரு குற்றத்துக்கு திட்டமிட்டமிடப்படடதா என்பதை கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டது என சந்தேகிக்கப்படும் துப்பாக்கி, 20 ரி-56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தக்கூடிய 7.62 மி.மீ. தோட்டாக்கள், 138 9 மி.மீ. தோட்டாக்கள், 31 3.2 மி.மீ. தோட்டாக்கள், 2 டெட்டனேட்டர்கள் என்பன பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.