தலவாக்கலையில் முத்துமாரியம்மன் ஆலயம் உடைக்கப்பட்டு கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டக்கொடை ஒக்ஸ்போட் தோட்டத்தில் இன்று அதிகாலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடம் பெற்ற கொள்ளை
ஆலயத்தின் கதவை உடைத்து உள்நுழைந்துள்ள கொள்ளையர்கள், அம்மனுக்கு அணிவித்திருந்த தங்க தாலி மற்றும் ஐயப்பன் சுவாமிக்கு அணிவித்திருந்த தங்க சங்கிலி, ஆலயத்தின் உண்டியல் என்பவற்றை திருடி சென்றுள்ளனர்.
ஒக்ஸ்போட் தோட்டத்தில் (22) மாலை முதல் இன்று (23) காலை வரை மின் தடை ஏற்பட்டிருந்தால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.