கண்டி கலஹா சுதுவெல்ல பகுதியில் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போன சிறுவன் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெல்தொட்டை பிரிவின் ஆற்றுப்பள்ளத்தாக்கில் அவரின் சடலம் மீட்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
அச் சிறுவன் நேற்று பாடசாலை சென்று வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில் அந்தப்பகுதியில் உள்ள பாலம் ஒன்றை கடக்க முற்பட்ட நிலையில் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் கலஹா பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 5 ஆம் தரத்தில் கல்வி கற்ற மாணவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.