இஸ்ரேல் படையினருக்கும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையில் மோதல் இடம் பெற்று வருகின்றது.
இதில் இலங்கை பிரஜை ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் இவர் சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் பிரவேசித்தவர் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் அவருக்கு அந்த நாட்டிலிருந்து எந்தவித நட்டஈடும் வழங்கப்பட மாட்டாது என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
நபர் சுற்றுலா விசாவில் ஜோர்தானுக்குச் சென்றதாகவும் அதன் பின்னர் சட்டவிரோதமாக இஸ்ரேலுக்கு சென்று பணிபுரிந்து வந்துள்ளதாகவும் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜோர்தான் எல்லை வழியாக சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் பிரவேசித்து இரண்டு இலங்கைப் பெண்கள் இஸ்ரேல் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார நேற்று தெரிவித்துள்ளார்.
எனவே யுத்த சூழ்நிலையில் சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் வருவதை தவிர்க்குமாறு இலங்கை தூதுவர் நிமல் பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.