கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து துபாயிலிருந்து வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் இரு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் கைதான பொலிஸார் ஒருவரின் வீட்டில் வைத்து அந்த வர்த்தகரிடமிருந்த தங்க துகள்கள் அடங்கிய 8 ஜெல் பொதிகளை பலவந்தமாக அபகரித்த இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்களை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தங்கத் துகள்கள் கலந்த ஜெல்
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொலிஸ் சுற்றுலா பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட்கள் இருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களுடன் தங்கத் துகள்கள் கலந்த ஜெல் பொதிகளும் கைப்பற்றப்பட்டன.
நாத்தாண்டிய, கொஸ்வத்த கொட்டாரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த முப்பது வயதுடைய வர்த்தகர் ஒருவர் செய்த முறைப்பாட்டையடுத்து, சந்தேகத்தின் பேரில் பொலிஸ் சார்ஜன்ட்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.