ஸ்ரீலங்கன்’ ஏர்லைன்ஸ் நிறுவனம் தெற்காசியாவின் சிறந்த விமான சேவைக்கான விருதை வென்றுள்ளது.
இந்த விருது இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்ற தெற்காசிய சுற்றுலா விருது விழாவில் வழங்கப்பட்டது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சிறந்த வணிக வகுப்பு விருதையும் வென்றுள்ளது.
விமான நிறுவனங்கள் மற்றும் விமானத் துறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் விருதுகளுக்காக வாக்களிக்கப்படுகின்றன.
இதேவேளை, கடந்த வருடம் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் அதிதிகளால் தெரிவு செய்யப்பட்ட ஆண்டின் சிறந்த விமான சேவைக்கான விருதையும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கன்’ ஏர்லைன்ஸ் விமான சேரவக்கான பல விருதுகளை வென்றாலும், பல்வேறு கடன் நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே அதன் செயல்பாடுகள் இடம்பெறுவதாக அரசாங்கம் தொடர்ந்து கூறிவருவதுடன், பல சந்தர்ப்பங்களில் ‘ஸ்ரீலங்கன்’ ஏர்லைன்ஸை தனியார்மயப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டிருந்தது.
அதேபோன்று விமான சேவையை முன்னெடுக்க போதியளவு விமானங்கள் இன்மையால் கடந்த சில வாரங்களாக ‘ஸ்ரீலங்கன்’ ஏர்லைன்ஸின் விமானங்கள் தாமதாக சென்றதால் பயணிகள் பல அசௌகரியங்களுக்கும் முகங்கொடுத்தனர்.