நாத்தாண்டிய பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய இரண்டு மாணவர்கள், காணாமல் போன நிலையில் குருநாகல் புத்தளம் வீதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போன மாணவர் ஒருவரின் உறவினர் வீட்டிலேயே குறித்த மாணவர்கள் இரண்டு பேரும் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரு மாணவர்களும் காணாமல் போனமை பற்றி, மாணவர்களின் தாய் மற்றும் தந்தை நேற்று (19) நள்ளிரவு மாரவில தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
புகையிலை மற்றும் சுண்ணாம்பு போன்றவற்றை வைத்திருந்த நிலையில், பிடிபட்டதையடுத்து, பாடசாலை அதிபர் அந்த இரண்டு மாணவர்களையும் கண்டித்ததாகவும், இதனையடுத்து அவ்விருவரும் அழுதுகொண்டிருந்ததாகவும் மாணவர்களின் பெற்றோர்கள் பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
மாரவில தலைமையக பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று காணாமல் போன நிலையில் மீட்கப்பட்ட இரண்டு மாணவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், அவர்களை பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.