கொழும்பு மெக்கலம் வீதியில் உள்ள மத்திய தபால் பரிமாற்று நிலையத்துக்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை (24) பிற்பகல் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்துக்குப் பொதி ஒன்றை எடுத்துச் செல்வதற்காக சொகுசு காரில் இருவர் வந்துள்ளனர்.
இதன், அங்கு முச்சக்கரவண்டியில் வந்த பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் அவர்களை அழைத்துச் சென்றுள்ளனர்.
இருப்பினும் இருவரும் வந்த சொகுசு வாகனம் இன்னும் அந்த இடத்தில் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.