தொடர்ச்சியாக நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இவ் ஆண்டில் மாத்திரம் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 39 மரணங்களும், 66,500 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
கண்டி, கொழும்பு, நுகேகொடை, கொத்தட்டுவ, கம்பஹா மற்றும் அத்தனகல்ல பிரதேசங்களில் அதிகளவு டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.