சென்னையில் சாமி தனக்கு எதுவும் செய்யவில்லை என நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெரு ஜங்ஷனில் உள்ள வீரபத்ர சுவாமி தேவஸ்தானத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்லதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில்மேலும் தெரியவருகையில்,
சாமி தனக்கு எதுவும் செய்யவில்லை
பெட்ரோல் குண்டு வீசிய முரளி கிருஷ்ணா என்பவர் கோவில் அருகே ஜிகே டிரேடர்ஸ் என்ற கடை நடத்தி வருகிறார். இவர் சாமி தனக்கு எதுவும் செய்யவில்லை என்ற கோபத்தில் பீர் பாட்டிலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கோவிலில் வீசியது தெரிய வந்தது.
இதையடுத்து, பெட்ரோல் குண்டு வீசிய முரளிகிருஷ்ணாவை கொத்தவால் சாவடி பொலிசார் கைது செய்தனர். கைதான முரளி கிருஷ்ணா மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் பீர் பாட்டில்கள் சிதறி கொட்டிய இடத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் தடவியல் நிபுணர்களும் ஆய்வு செய்து வருகின்றனர்.
உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதித்துறையின் கீழ் செயல்படும் டிரஸ்டின் கீழ் அந்த ஆலயம் இயங்கி வருவதாக கூறப்படுகின்றது.