யாழ்ப்பாணத்தில் நலன்புரி கொடுப்பனவை பெறச் சென்ற வயோதிபப் பெண்ணொருவர் திடீர் சுகவீனமுற்று மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியை சேர்ந்த அமிர்தலிங்கம் கமலேஸ்வரி (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவர் நேற்று வியாழக்கிழமை (09) நலன்புரி உதவித்திட்டத்தை பெறுவதற்காக தனது வீட்டிலிருந்து சென்ற நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.