கொழும்பு – பொரள்ளை பகுதியில் போலி காணி உறுதிப்பத்திரமொன்றை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இராஜகிரிய பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய நபர் ஆவார்.
கைதுசெய்யப்பட்ட நபர் 87.5 பரப்பு காணியை போலி உறுதிப்பத்திரம் தயாரித்து 136 மில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொரள்ளை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டதையடுத்து சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.