இலங்கையில் சந்தையில் மாம்பழம் உள்ளிட்ட பழங்களை பழுக்க வைக்க இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலை சந்தையில் கிடைக்கும் பல பழங்களில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான நிலையில், நுகர்வோர் பழங்களை வாங்கும் போது கவனமாக இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் ரொஷான் குமார வேண்டுகோள் விடுத்துள்ளார்.