அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் இன்றைய பெறுமதி சற்று வீழ்ச்சி அடைந்துள்ளமை தொடர்பில் இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 333.20 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 322.79 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், கனேடிய டொலரின் கொள்முதல் பெறுமதி 234.02 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 244.72 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, பிரித்தானிய பவுண்டின் கொள்முதல் பெறுமதி 401.46 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 417.49 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.