நாடளாவிய ரீதியில் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் என்றவாறு அரச சேவையில் உள்ள மொத்த வெற்றிடங்களில் 82 வீதம் ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை பதவிகளுக்கானது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதன்படி, 52,960 முதன்மை நிலை வெற்றிடங்களும், 29,876 இரண்டாம் நிலை வெற்றிடங்களும் உள்ளன.
இவ்வளவு வெற்றிடங்கள் இருந்தாலும், முதன்மை நிலை பதவிகளுக்கு 43, 649 பேரையும், இரண்டாம் நிலை பதவிகளுக்கு 11, 684 பேரையும் ஆட்சேர்ப்பு செய்வதில் அமைச்சகம் கவனம் செலுத்தி வருகிறது.
வெற்றிடமாகவுள்ள பணியிடங்கள்
மேலும், 14 வீதம் மூத்த நிலைப் பணியிடங்களும், 4 வீதம் மூன்றாம் நிலைப் பணியிடங்களும் வெற்றிடமாக உள்ளதால், அதற்கும் சிலரை நியமிக்கத் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பொது நிர்வாக அமைச்சு ஆட்சேர்ப்புக்கான அறிக்கையை அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழு, ஆட்சேர்ப்பு செயல்முறையை மீளாய்வு செய்வதற்காக அமைச்சரவைக்கு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.