அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் இன்றைய பெறுமதி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை (2023.11.28) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 324.1133 ஆகவும் விற்பனை விலை ரூபா 334.1117 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், கனேடிய டொலரின் கொள்முதல் பெறுமதி 236.52 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 247.40 ரூவாகவும் பதிவாகியுள்ளது.