யாழ் வலிகாமம் பகுதியில் பிரபல பாடசாலை மாணவி தற்கொலைக்கு முயன்ற நிலையில் அயலவர்களால் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நேற்று இரவு வெளியாகிய க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற குறித்த மாணவி விஞ்ஞான பாடத்தில் பி பெறுபேறு எடுத்துள்ளார்.
மன உளைச்சலுக்குள்ளான மாணவி
இதனால் மருத்துவத்துறைக்கு குறித்த பாடசாலையில் அனுமதிக்கமாட்டார்கள் என கூறி மாணவியின் தாயாரும் , சுவிஸ்லாந்தில் உள்ள மாணவியின் சித்தியும் அதிகாலையில் இருந்தே கடுமையான முறையில் மாணவியை ஏசியதாக தெரியவருகின்றது.
இதன் காரணமாக மன உளைச்ச்சலுக்கு உள்ளான மாணவி தாயும் தந்தையும் வேலைக்கு சென்ற பின்னர் அறையைப் பூட்டி துாக்கில் தொங்க முற்பட்டதாகத் தெரிவருகின்றது.
மாணவியின் செயலைகண்ட பாட்டி, பதறியடித்து கூக்குரல் எழுப்பிய நிலையில் அயலவர்கள், அறையை உடைத்து உள்ளே புகுந்து மாணவியை காப்பாற்றியதாகவும் கூறப்படுகின்றது,
அதேவேளை பிள்ளைகளின் கல்வி என்பது , ஒரு பெறுபேற்றை மட்டும் வைத்து அவர்களுக்கு திறமைகள் இல்லை என எண்ணுதல் தவறாகும்.
மாணவர்களிடையே பல திறமைகளை ஒளிந்துள்ளன. பெற்றோர்கள் அவற்றினை அடையாளம் கண்டு மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர , பிள்ளைகள் விபரீத முடிவுகளுக்கு செல்லும் அளவுக்கு கண்டிக்க கூடாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.