மிக்ஜாம் புயல் கனமழை காரணமாக சென்னையில் பல சாலைகள் நீரில் மூழ்கி பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதோடு சென்னை விமான நிலையம் நீரில் மூழ்கியுள்ளது.
சென்னையை பொறுத்த அளவில் கடந்த 4 மணி நேரத்தில் சராசரியாக 6.7 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கின்றது.
மழை பொழிவை பொறுத்த அளவில் அதிகபட்சமாக கொரட்டூரில் 62.4 மி.மீ, அம்பத்தூரில் 54.3 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.
தொடருந்து சேவை பாதிப்பு
இதன் காரணமாக தாழ்வான இடங்களில் மழை நீர் புகுந்துள்ளதுடன் தொடருந்து தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் சென்னை சென்டரல் புறநகர் தொடருந்து நிலையத்திலிருந்து அரக்கோணம் செல்லும் மின்சார தொடருந்து தாமதமாக இயக்கப்படுகின்றன.
விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. புனேவிலிருந்து சென்னை வந்து சேர வேண்டிய விமானங்கள் தாமதமாகியுள்ளன. சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் தாமதமாகியுள்ளன.