இவ்வருடத்தில் கடந்த முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இந்த பெறுமதி 10.9 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் வருமானம்
மத்திய வங்கியின் அறிவிப்பில் மேலும், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் முடிவடைந்த 9 மாதங்களில் அரசாங்கத்தின் வருமானம் 2,118.8 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
கடந்த வருடத்தில் இதே காலப்பகுதியில் அரசாங்கத்தின் வருமானம் 1,450.4 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.