டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் (05-12-2023) வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இதன்படி, இலங்கை மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 322.17 ரூபாவிலிருந்து 322.41 ரூபாவாக உயர்ந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 333.39 ரூபாவிலிருந்து 333.65 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொமர்ஷல் வங்கியில் – அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 321.75 ரூபாவாகவும், 332.00 ரூபாவாகவும் உள்ளது.
சம்பத் வங்கியில் – அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 322 ரூபாவிலிருந்து, 323 ரூபாவாக உயர்ந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 332 ரூபாவிலிருந்து 333 ரூபாவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.