இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரித்தானிய பெண் ஒருவர் எல்ல – பசறை பிரதான வீதியில் உள்ள சிறிய சிவனொளிபாதமலையை பார்வையிட சென்ற போது ஏற்பட்ட விபத்தில் பிரித்தானிய பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த பெண் செலுத்திய உந்துருளி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதன்போது, காயமடைந்த 34 வயதுடைய பிரித்தானிய பெண், சிகிச்சைகளுக்காக தெமோதரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.