கொழும்பில் உருவாக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தில் முதலாவது சுழலும் உணவகத்தை எதிர்வரும் 09 ஆம் திகதி திறப்பதற்கு தனியார் நிறுவனம் ஒன்று தீர்மானித்துள்ளது.
இதன்படி, சிட்ரஸ் ஹோட்டல் குழுமத்துடன் இணைந்து இந்த உணவகம் பொதுமக்களுக்கு திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள குறித்த சுழலும் உணவகம், தெற்காசியாவின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள முதல் சுழலும் உணவகமாக கருதப்படுகிறது.
இந்த உணவகத்தை பொதுமக்களுக்கு திறந்து வைப்பது தொடர்பில் அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பும் இன்று நடைபெற்றிருந்தது.



















