கலா ஓயாவில் நீராடிய போது நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கலா ஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் அனுராதபுரம் – கெகிறாவ பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடையவராவார்.
மரண விசாரணை
இது தொடர்பில் பிரதேசவாசிகளால் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பேரில் தேடுதல் நடத்தப்பட்ட போது இவர் பொலிஸாரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக திடீர் மரண விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இபலோகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.