மலையக ரயில் பாதைக்கான ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹாலிஎல மற்றும் உடுவர இடையேயான புகையிரத பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் அந்த பகுதியில் பாதை தடைப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் புகையிரதம் தாமதமாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று (08) பிற்பகல் வேளையில் குறித்த இடத்தில் இருந்து மண்மேடு சரிந்து புகையிரத பாதை தடைபட்டதுடன், இதன் காரணமாக சுமார் 1 மணிநேரம் புகையிரத போக்குவரத்து தடைப்பட்டது.
தற்போது மண்மேடு அகற்றப்பட்டு ரயில் பாதையை புனரமைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது