நாடளாவிய ரீதியில் நிலவும் மின்வெட்டு காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அத்தியாவசிய சேவைகளுக்கு தேவையான நீர் பவுசர்கள் மூலம் விநியோகிக்கப்படுகின்ற நிலையில், நீர் விநியோகத்திற்கான ஜெனரேட்டர்கள் உள்ள பிரதேசங்கள் பாதிக்கப்படுவதில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.
நீர் விநியோகத்திற்கான ஜெனரேட்டர்கள் இல்லாத பிரதேசங்களில் நீர் விநியோகத்தை மீளமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
நேற்று மாலை (டிசம்பர் 09) கொத்மலையில் இருந்து பியகம வரையிலான மின் விநியோக பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடு முழுவதும் பாரிய மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.