தற்போது நிலவும் பாரிய மின்வெட்டுக்கு மத்தியில் அனைத்து பொலிஸ் நிலையங்களையும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோன் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.