யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் போதை மாத்திரை மற்றும் போதைப் பொருளுடன் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைதான மாணவரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று செவ்வாய்க்கிழமை (12) யாழ்ப்பாண நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரை
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ கூட பிரதேசத்தில் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் நடமாடுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மாணவன் கைது செய்யப்பட்டார்.
மாணவனை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது நீதவான் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
மாணவன் ஏற்கனவே திருநெல்வேலிப் பகுதியில் போதை தலைக்கேறிய நிலையில் ரகளையில் ஈடுபட்ட நிலையில் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது.