இலங்கை விமானப் படையின் 73 ஆவது ஆண்டு பூர்த்தியை யாழ்ப்பாணத்தில் கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விமானப் படையின் 73ஆவது ஆண்டு பூர்த்தி எதிர்வரும் (2024.03.02) கொண்டாடப்படவுள்ளது.
வட மாகாண ஆளுநருக்கு விமானப் படையின் படைத்தளபதி எயார் மார்சல் உதேனி ராஜபக்ஸ இது தொடர்பில் நேற்று (13.12.2023) தௌிவுபடுத்தினார்.
யாழ்ப்பாணத்திலுள்ள வட மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது 73ஆவது ஆண்டு பூர்த்தியை கொண்டாடுவதற்கான திட்டங்கள், அதற்கு தேவையான வளப்பகிர்வு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் அதரிவிக்கப்பபட்டுள்ளது.