தென்னிந்திய தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் பங்கேற்ற புசல்லாவை, நயாபன பகுதியை சேர்ந்த அசானி இன்று நாடு திரும்பினார்.
குழந்தைகளின் இசை திறமையை உலகளவில் அறிய வைக்கும் நிகழ்ச்சியாக சரிகமப மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பெற்றுள்ளது.
மலைய மக்களுக்கு கிடைத்த பெருமை
மலையத்தை சேர்ந்த மாணவி அசானி அந்த நிகழ்ச்சியில் பங்பற்றியிருந்தமை மலைய மக்களுக்கே கிடைத்த பெருமையாகும்.
போட்டியில் பங்கு பற்றிய அசானி , இலங்கை தமிழர்களை தாண்டி தமிழக மக்கள் மனதிலும் இடம்பிடித்துவிட்டார் என்றுதான் கூறவேண்டும்.
அது மட்டுமல்லாது சரிகமப நிகழ்வில் பங்கு பற்ரியதன் ஊடாக மலையக மக்கள் படும் இனனல்களை உலகிற்கு தெரியப்படுத்தியுள்ளார் அசானி. இந்நிலையில் நாடுதிரும்பிய அசானிக்கு பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.
அதேவேளை இம்முறை இடம்பெற்ற சரிகமப நிகழ்வில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கில்மிக்ஷா வெற்றி பெற்ரிருந்தமை குறிப்பிடத்தக்கது.