கொழும்பு, புறக்கோட்டையில் காலாவதியான முக கிறீம்கள் மற்றும் வாசனை திரவியங்களை தலா 100 ரூபாய்க்கு விற்பனை செய்யும் மோசடி கும்பலை நுகர்வோர் அதிகாரசபையின் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
வெல்லம்பிட்டி பகுதியில் காலாவதியான கிறீம்கள் அழிப்பதற்காக ஒதுக்கப்படுகிறது. இதனை அவதானித்த மோசடி வியாபாரிகளை அதனை கொழும்பில் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
புறக்கோட்டை முதலாம் மற்றும் இரண்டாவது குறுக்கு வீதியின் நடைபாதையில் காலாவதியான வாசனை திரவியங்கள் மற்றும் அழகுசாதன பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, நுகர்வோர் அதிகார சபைக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளனர்
காலாவதியான கிறீம்கள்
அதற்கமைய நுகர்வோர் அதிகாரசபையின் கொழும்பு மாவட்ட சுற்றிவளைப்பு பிரிவு, பொலிஸாருடன் இணைந்து சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர். முக அழகுசாதனப் பொருட்கள் தவிர, காலாவதியான வாசனை திரவியங்களும் இங்கு விற்கப்பட்டன.
நிறுவனங்களால் அழிக்கப்படும் இப்பொருட்கள் வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரால் பெறப்பட்டு பின்னர் நடைபாதையில் பல்வேறு நபர்களால் விற்பனை செய்யப்படுவதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதற்கமைய, சம்பந்தப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், இந்த வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்வதாக தெரிவித்தனர்.