நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் நாளைய தினம் மூடப்படுமென கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
நத்தார் பண்டிகை தினத்தன்றே இவ்வாறு மதுபான விற்பனை நிலையங்களை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடு தளர்வு
எவ்வாறாயினும், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் (SLTDA) அங்கீகரிக்கப்பட்ட நட்சத்திர வகுப்பு ஹோட்டல்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை டிசம்பர் 26 பூரணை தினத்தில் சுற்றுலா ஸ்தாபனங்கள் உட்பட அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.