வரலாற்று சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் திருட முற்பட்டவர்களை பாம்பு தீண்டிய நிலையில் தப்பி சென்றுள்ளார்கள்.
இந்நிலையில் கடந்த 22.10.23 அன்று வெள்ளிக்கிழமை இரவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் உண்டியலை உடைக்கும் நோக்குடன் மூன்று பேர் கதவினை உடைத்து திருடுவதற்காக முயன்றுள்ளார்கள்.
சி.சி.ரி.வி கமராவில் பதிவான காட்சி
திருட முற்பட்டவர்கள் கூரிய ஆயுதங்களுடன் ஆலயத்திற்குள் நுழைந்தவர்கள் சி.சி.ரி.வி கமராவின் இணைப்பினை துண்டித்துவிட்டு கொள்ளையிட முற்பட்டுள்ளபோது குறித்த நபரை பாம்புத் தீண்டியுள்ளது.
இந்த சம்பவத்தினை அடுத்து பாம்பு கடிக்கு இலக்கானவரை கொண்டு சென்றுள்ளார்கள்.
இந்த சம்பவம் தொடர்பில் ஆலயத்தின் சி.சி.ரி.வி கமராவில் காட்சிகள் பாதிவாகியுள்ளதுடன் இதுதொடர்பில் ஆலய நிர்வாகத்தினால் (24.12.2023) அன்று முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதனைத் தொடர்ந்து மேலதிக விசாரணைககளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.