தென்னிந்திய பிரபல இசை நிகழ்ச்சியில் மகுடம் சூடிய ஈழத்துக்குயில் கில்மிஷாவை,நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று (29.12.2023) நேரில் சென்று வாழ்த்தி மதிப்பளித்துள்ளார்.
தன் இசையால் உலகத்தமிழர்களின் உள்ளம் கவர்ந்த இளம் பாடகியாக உருப்பெற்று, ஈழத்தமிழர்களின் அடையாளமாய் நேற்றைய தினம் கில்மிஷா (28.12.2023) நாடு திரும்பியுள்ளார்.
அரியாலையில் உள்ள வீட்டிற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில் சென்று வாழ்த்தி மதிப்பளித்தார்.
இதன்போது கில்மிஷாவின் குடும்பத்தினரும் உடனிருந்தனர்.