மாத்தறை வெலிகம-பெலன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த துப்பாக்கிசூட்டு சம்பவம் இன்று(31.12.2023) காலை இடம்பெற்றுள்ளதுடன் மற்றுமொரு நபர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஆரம்பக்கட்ட விசாரணை
இதற்கமைய பொலிஸ் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே அடையாளம் தெரியாத நபரொருவரினால் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



















