யாழ் பல்கலைக்கலைக்கழக தொழிநுட்ப பீடத்தில் கல்வி கற்ற மலையக யுவதி தற்போது யாழ் பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீடத்திற்கு விரிவுரையாளராக தெரிவாகியுள்ளார்.
மத்திய மாகாணத்தின் நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம்-03 இற்குட்பட்ட பாடசாலையான நு /ஹோல்புறூக் விஞ்ஞானக் கல்லூரியில் கல்விக் கற்று யாழ் பல்கலைக்கழக தொழிநுட்ப பீடத்திற்குத் தெரிவான மலையக யுவதி சக்திவேல் பிரபாகினி தற்போது யாழ் பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீடத்திற்கு விரிவுரையாளராக தெரிவாகியுள்ளார்.
குறித்த மலையக யுவதியின் முயற்சி வரலாற்றுப் பதிவான வெற்றியாக அமைவதுடன் மலையக சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.