யாழ்ப்பாணத்தில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தம்பதியினரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வருவதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து தம்பதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது 15 லீற்றர் கசிப்பினைக் கைப்பற்றியுள்ள பொலிஸார், இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.