வெள்ளவத்தை பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் போன்று வேடமணிந்து தொலைபேசி விற்பனை நிலையமொன்றில் கொள்ளையிட்ட நால்வர் இன்று வியாழக்கிழமை (4) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கடற்படை வீரர்களாக கடமையாற்றும் 37 மற்றும் 38 வயதுடையவர்களாவர்.
மேலதிக விசாரணை
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் குறித்த தொலைபேசி விற்பனை நிலையத்திற்கு வந்த இனந்தெரியாத நால்வர் பொலிஸ் உத்தியோகத்தரின் அடையாள அட்டையை காண்பித்து விற்பனை நிலையத்தை பரிசோதனை செய்யவுள்ளதாக கூறியுள்ளனர்.
பின்னர் பணியாளரிடம் கூரிய ஆயுதத்தை காண்பித்து அச்சுறுத்தி 6இலட்சத்து 70ஆயிரம் ரூபா பணமும் பணியாளரின் கையடக்க தொலைபேசியையும் கொள்ளையிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விற்பனை நிலைய உரிமையாளர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாடு அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.