கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் தொடருந்து ஒன்றில் மோதிய வெளிநாட்டவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (06.01.2024) காலை வெள்ளவத்தை தொடருந்து கடவையில் இடம்பெற்றுள்ளது.
காலியிலிருந்து கொழும்பு நோக்கி வந்த தொடருந்தில் மோதிய நிலையிலேயே இந்த வெளிநாட்டவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
அத்துடன், உயிரிழந்த நபர் தொடர்பான விடயங்கள் இதுவரை வெளிவரவில்லை என்பதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும், குறித்த வெளிநாட்டவர் கவனக்குறைவால் உயிரிழந்தாரா அல்லது தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டாரா என்பது தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளிவரவில்லை.