உலகெங்கிலும் தமிழர் பண்டிகையான பொங்கல் விழா கொண்டாடப்படவுள்ள நிலையில் வடக்கு மாகாணத்திலும் பொங்கல் திருநாள் கொண்டாடப்படவுள்ளது.
குறித்த விழாவானது எதிர்வரும் 16ஆம் திகதி கிளிநொச்சி பல்லவராயன்கட்டில் நடைபெறவுள்ளது.
வடக்கு மாகாண கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்தப் பொங்கல் விழாவில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் கலந்துகொள்ளவுள்ளார்.
பாரம்பரிய கலை நிகழ்வுகள்
பொங்கல் நிகழ்வில் சம்பிரதாயபூர்வமாகப் புதிர் எடுத்து பொங்கல் இடம்பெறவுள்ளதோடு அதனைத் தொடர்ந்து பாரம்பரிய கலை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.