தமிழகத்தில் உள்ள முக்கிய பகுதியொன்றில் குப்பையில் இருந்து 7 மாத சிசு உடல் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலு தெரியவருவதாவது,
சென்னை – சைதாப்பேட்டை சத்யா நகர் ஆற்றங்கரை ஓரம் ஒரு இடத்தில் குப்பைகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் (12-01-2024) காலை ஆற்றங்கரைக்கு வந்த பொதுமக்கள் அங்கு குப்பைக்கு நடுவில் இறந்த நிலையில் 7 மாத சிசு இருந்ததை பார்த்த உடனே பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோட்டூர்புரம் பொலிஸார் சிசு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது தொடர்ப்பில் வழக்குப் பதிவு செய்த பொலிஸார் சிசு உடலை வீசி சென்றது யார் என்பது தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவ இடத்தில் பதிவான சிசிரிவி காட்சிகளை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட நபரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதேவேளை, அடையாறு ஆற்றங்கரையோரம் 7 மாத சிசு உடலை வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.