இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்றைய தினத்துக்கான (14.01.2024) வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்.
ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாறை, அம்பாந்தோட்டை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (30-40) கிலோமீற்றர் வரை ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.