தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் இணை பிரியாமல் வாழ்ந்த வயது முதிர்ந்த தம்பதியின் உடல்களும் ஒரே குழியில் நல்லடக்கம் செய்யப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த முத்து என்பவர் தனது 85 ஆவது வயதில் நேற்று முன்தினம் (15) உறக்கத்திலேயே உயிரிழந்துள்ளார்.
ஒரே குழியில் நல்லடக்கம்
இந்நிலையில் கணவர் உயிரிழந்த அதிர்ச்சி தாங்க முடியாமல் அவர் மனைவி ராஜம்மாள் (16) அடுத்த நாள் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இல்லற வாழ்வில் இணை பிரியாமல் வாழ்ந்த தம்பதியை ஒரே வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்ற குடும்பத்தினர், தமபதிகள் இருவரையும் ஒரே குழியிலேயே அடக்கம் செய்துள்ளனர்.
இணைபிரியாது வாழ்ந்த அந்த தம்பதி மரணத்திலும் கூட இருவரும் ஒன்றாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.