போக்குவரத்து விளக்குகள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞைகளை மீறி வாகனம் செலுத்துவது தொடர்பில் பாதுகாப்பு கமரா அமைப்புகளில் பதிவாகியுள்ள தரவுகளின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேஸ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை (22) முதல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் தேடப்பட்டு, அபராதத் தொகையுடன் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பப்படுவார்கள் என்றும் கூறப்படுகின்றது.
இதேவேளை, குற்றப்புலனாய்வு திணைக்களத்தை மறுசீரமைப்பதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.